Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம்’’- கஸ்தூரி சர்ச்சை டுவீட்

’’திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம்’’- கஸ்தூரி சர்ச்சை டுவீட்
, சனி, 4 மார்ச் 2023 (14:07 IST)
வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் வடமாநிலத் தொழிலாளர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேலை செய்துவரும் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ‘’வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என’’ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிக்கைகளின் இந்த வதந்தி பரப்பியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகை கஸ்தூரி, இது குறித்து இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், ’’வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை .  இது வந்தோரை வாழவைக்கும்  தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர்  என யாராயிருந்தாலும்,   திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு புதுச்சேரி ஐடி விங் காயத்ரி ஸ்ரீகாந்த்,’’ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஊதுபத்தி உருட்டியதை பேசாத வாய், திருட்டு ரயில் ஏறி தான் வந்தேன் என வெளிப்படையாக சொல்லி பல கோடி தமிழ் குடும்பங்களை தலைமுறைகள் கடந்து வறுமையில் இருந்து மீட்டு சுயமரியாதையூட்டிய கலைஞரின் ஆட்சியில் யாதும் ஊரே யாவரும் கேளிர் தான்! ’’என்று பதிலடி கொடுத்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் சூதாட்டம்: 15 பேரின் தற்கொலைகளுக்கும் ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்