Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரனை வீழ்த்த வியூகம் ; 30 பிரச்சார பீரங்கிகள் ரெடி : எடப்பாடியின் பலே பிரசார திட்டம்

Advertiesment
தினகரனை வீழ்த்த வியூகம் ; 30 பிரச்சார பீரங்கிகள் ரெடி : எடப்பாடியின் பலே பிரசார திட்டம்
, புதன், 29 நவம்பர் 2017 (11:20 IST)
ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனை தோற்கடிக்க சசிகலா குடும்ப ஊழல்களை முன்வைத்து பிரச்சாரம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு செய்துள்ளது.


 
இடைத்தேர்தல் என வரும் போது, ஆளும்கட்சியே வெற்றி பெற்று வருவது காலம்காலமாய் நடந்து வரும் ஒன்றுதான். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவிற்கு திமுக, தினகரன் என கடும் போட்டி நிலவுகிறது. மேலும், ஜெ.வின் மறைவிற்கு பின் ஆளும் கட்சியினரின் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
 
எனவே, இரட்டை இலை கிடைத்துவிட்டாலும், அந்த சின்னத்திற்கு விழும் ஒட்டுகள் ஆர்.கே.நகர் தொகுதியில் இப்போதும் விழுமா என்பது தெரியவில்லை. அதோடு, கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே.நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தினகரன் தரப்பில் ரு.4 ஆயிரம் பணம் மற்றும் பல பரிசு பொருட்ள் மக்களிடம் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. எனவே, பணம் வாங்கியவர்கள் இந்த முறை தினகரனுக்கு ஓட்டளிக்க வாய்ப்பிருப்பதாக எடப்பாடி தரப்பு கருதுகிறது. 
 
அதை முறியடிக்க, சசிகலாவையும், அவரது குடும்ப உறுப்பினர்களின் ஊழல்களையும் கையிலெடுத்து பிரச்சாரம் செய்வது என எடப்பாடி தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக, 30 பேர் கொண்ட பிரச்சார பீரங்கிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த குழுவில் இடம் பெறும் நட்சத்திர பேச்சாளர்கள், முறைகேடாக சம்பாதித்த பணத்தால் உங்களை விலைக்க வாங்க தினகரன் முயல்கிறார். அதற்கு அடிபணியாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என தெரு தெருவாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளனராம். அதோடு, அதிமுக ஓட்டுகளை பிரித்து, திமுக வெற்றி பெற தினகரன் திட்டம் போடுகிறார். அவர் திமுகவுடன் ரகசிய கூட்டு வைத்துள்ளார் என்றும் முழங்க உள்ளனர்.
 
இவற்றையெல்லாம் தினகரன் எப்படி முறியடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயவுசெய்து யாரும் நர்ஸிங் படிக்காதீங்க! கண்ணீருடன் போராடும் நர்ஸ்கள்