முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கு 4 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் கிடப்பில் இருந்த நிலையில் தற்போது அந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை துறை ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் ஒற்றை தலைமைப் பதவியை பிடித்து உள்ள எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.