டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

Prasanth K
வியாழன், 16 அக்டோபர் 2025 (14:21 IST)

மகளிர் உரிமைத்தொகை பெற புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து விவரங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதில் அவர் “மகளிர் உரிமைத்தொகையாக இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 1.16 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

 

ஒவ்வொரு மகளிருக்கும் தலா ரூ.26 ஆயிரம் வரை இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலர் பயனடைய வேண்டும் என்பதற்காக நிபந்தனைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

மகளிர் உரிமைத்தொகை கோரி புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments