உதவி சுற்றுலா அதிபர் பதவிக்கு தகுதி தற்போது திருத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா துறையில் உள்ள உதவி சுற்றுலா அலுவலர் மற்றும் சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடைபெற உள்ளன. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலா அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் தேர்வு நடத்தப்பட்டு காலி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உதவி சுற்றுலா அலுவலர் பதவியில் 23 காலியிடங்கள் நிரப்பப்படும் நிலையில் இதற்கான திருத்தப்பட்ட தகுதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வை இதுவரை பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற நிலையில் தற்போது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது சுற்றுலா மேலாண்மைகள் டிப்ளமா படிப்பு அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி அல்லது பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி திருத்தம் தொடர்பாக சுற்றுலா துறையிடமிருந்து டிஎன்பிஎஸ்சிக்கு விரைவில் ஒப்புதல் அனுப்பப்படும் என்றும் இந்த ஒப்புதல் கிடைத்ததும் உதவி சுற்றுலா அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.