Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

Advertiesment
செனாப் பாலம்

Siva

, புதன், 11 ஜூன் 2025 (08:29 IST)
செனாப்  பாலத்தை கட்டிய ஆயிரம் பொறியாளர்களில் நானும் ஒருவர் என்றும், எனவே என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலப்படுத்த வேண்டாம்," என்றும் செனாப் பாலத்தைக் கட்டியவர்களில் ஒருவரான மாதவி லதா கூறியுள்ளார். 
 
செனாப் நதியின் மேல் உலகின் மிகப்பெரிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடியில் படித்த மாதவி லதா இதில் பங்களித்து வந்திருக்கும் நிலையில், இது குறித்த செய்திகள் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
 
இந்த நிலையில், இந்தச் செய்திகளைப் படித்த மாதவி லதா, "பாலம் கட்ட நடந்த அற்புதங்கள்" போன்ற தலைப்புகளில் வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும், "என்னை தேவையில்லாமல் பிரபலப்படுத்த வேண்டாம் என்றும், செனாப் பாலத்துக்காக பாராட்டப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான பொறியாளர்களில் நானும் ஒரு ஆள்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 "என்னை போலவே தங்கள் மகளை பெரிய ஆளாக்க வேண்டும் என்று பலர் தந்தையர்கள் கூறியதை பார்த்து எனக்கு மகிழ்ச்சி என்றும், பலர் சிவில் இன்ஜினியரிங் படிக்க தற்போது விரும்புகின்றனர் என்ற மெசேஜ் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்," என்றும் தெரிவித்தார்.
 
ஆனால், அதே நேரத்தில் இந்த பாலம் கட்டியதற்கு இந்திய ரயில்வே தான் முக்கிய காரணம் என்றும், "எல்லாப் புகழும் இந்திய ரயில்வேக்கு," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 "இந்த பாலத்தைக் கட்டுவதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் ஆயிரக்கணக்கான இன்ஜினியர்கள் பணிபுரிந்தோம் என்றும், சரியான பகுதியில் நிலைத்தன்மை உருவாக்கவும், சாய்வான இடங்களில் அடித்தளம் அமைக்கவும் உதவும் இன்ஜினியர்களில் ஒருவராக நான் பணிபுரிந்தேன்," என்றும் அவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!