Publish Date: Sun, 04 Sep 2022 (15:35 IST)
Updated Date: Sun, 04 Sep 2022 (15:36 IST)
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு கலந்தாய்வு எப்போது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது
இந்த நிலையில் ஆகஸ்ட் 25 முதல் பொது பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் தாமதம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான பொதுபிரிவு கலந்தாய்வு நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது