Publish Date: Sun, 21 Aug 2022 (09:22 IST)
Updated Date: Sun, 21 Aug 2022 (09:23 IST)
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உண்டு உறைவிட பள்ளிகளில் ஆகஸ்ட் 22 முதல் அதாவது நாளை முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை நடக்க இருந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது
புதிய கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.