கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு 80 சதவீதத்தை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளது. இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை குறிக்கிறது.
இந்த ஆண்டு மட்டும், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 80.29% இடங்கள் நிரம்பியுள்ளன. மொத்தம் உள்ள 1,72,589 இடங்களில், 1,38,573 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்தில் உள்ள மொத்த 423 பொறியியல் கல்லூரிகளில், இன்னும் சுமார் 34,000 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களும் விரைவில் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் மத்தியில் பொறியியல் படிப்புக்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகிறது.