தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12,000 கோயில்களில் பூஜை செய்யக்கூட வருமானம் வருவதில்லை என அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் 44,000 க்கும் மேற்பட்ட கோயில்களும் மார்ச் மாதம் 25 ஆம் தேதியோடு மூடப்பட்டன. இதனால் அந்த கோயில்களில் பணிபுரிந்தவர்களின் வருவாய் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களின் வருமானத்துக்கு அறநிலையத்துறை மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை ’எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 37,000 கோயில்களுக்கு ஒருவரை மட்டுமே பணியமர்த்தும் அளவுக்கு வருமானம் வருகிறது. 11,999 கோயில்களுக்கு ஒரு வேளை பூஜை செய்யக்கூட வருமானம் வருவதில்லை. ஆனாலும் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டவர்களுக்கு பக்தர்கள் தரும் காணிக்கை மற்றும் தரிசன டிக்கெட்களில் இருந்து பணம் கொடுக்கப்பட்டு வருகிறது’ எனவும் தெரிவித்துள்ளது.