தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மட்டும் கொரோனா இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகி உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதில் 32 மாவட்டங்களில் மட்டும், 80 சதவீத இறப்பு பதிவாகியுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த பகுதிகளில் புதிய கட்டுப்பாட்டுப் பகுதிகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பட்டியலில் மாவட்டங்கள் அனைத்தும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகர்ப்புற மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.