தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென சமீபத்தில் தங்கம் விலை குறைந்தது என்பதும், கடந்த 5 நாட்களுக்கு முன் ஒரு சவரன் 68,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வந்த தங்கம், இன்று 66,000 ரூபாய்க்கும் கீழ் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூபாய் 8,225 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 சென்னையில் ரூபாய் 65,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,972 எனவும் ஒரு சவரன் ரூபாய் 71,776 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 102.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 102,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது