Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெற்பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை.! இரவு நேரங்களில் உலா வருவதால் விவசாயிகள் அச்சம்..!!

elephant

Senthil Velan

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (14:34 IST)
உசிலம்பட்டி அருகே  பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கீழே இறங்கி வந்த ஒன்றை காட்டு யானை கடந்த இரு தினங்களாக அடிவார பகுதியில் உள்ள இடும்பசாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தியது.
ALSO READ: ஐயப்ப பக்தர்களுக்கு 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள்..! அனுப்பி வைத்த அமைச்சர் சேகர்பாபு..!!
 
பெரும்பாலும் இந்த மலை அடிவார பகுதிக்கு யானைகள் வருவதில்லை என்றும் வழி தவறி இந்த பகுதிக்கு இந்த யானை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.,
 
சுமார் 20 க்கும் மேற்பட்ட வனத்துறை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரங்களில் கீழே இறங்கி வருவதாகவும்  வனச்சரக அலுவலர் செல்லமணி தெரிவித்துள்ளார்.
 
விலை நிலங்களை சேதப்படுத்தி வரும் இந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் முதலிடம்