வாழைத்தோட்டத்தில் மூன்று நாட்களாக முகாமிட்ட யானை - இழப்பீட்டு கேட்டு கோரிக்கை!
, வியாழன், 6 ஜூலை 2023 (11:14 IST)
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி ஊராட்சி புதுப்பதி கிராமத்தின் அருகே உள்ள தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக யானை முகாமிட்டு வாழை தோட்டத்தில் , வாழைத்தண்டை சாப்பிட்டு வருகிறது.
வனப்பகுதியை ஓட்டி தோட்டத்தின் எல்லையில் போடப்பட்டிருந்த வேலியை சாய்த்து, கம்பியை தாண்டி, வனத்திற்குள் செல்கும் யானையை விவசாயி ஒருவர் படம் பிடித்துள்ளார். யானை விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் வன விலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தினர்
அடுத்த கட்டுரையில்