Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

Advertiesment
vijay-bussy anand

Siva

, வியாழன், 17 ஏப்ரல் 2025 (21:04 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இதையடுத்து, நீதிபதி சக்திவேல் இந்த வழக்கை விசாரித்த போது, தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
 
 அம்பேத்கரின் வழியில் நடக்கும் தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி "யானை" சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அஸ்ஸாமைத் தவிர்ந்த மற்ற மாநிலங்களில் அந்த சின்னம்பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே உரிமையெனவும் தெரிவித்துள்ளது.
 
மேலும், தவெக கட்சி பதிவு செய்யும் போது யானை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பு வாதம் கூறியது.
 
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி