பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட நிலையில், அவரது மனைவியின் கட்சி பதவி நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி அவர்களுக்கு, தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல, கட்சியின் தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, கட்சியின் மேல் நிலை பிரதிநிதிகள் பொற்கொடியை சந்தித்து பேசினர். அப்போது, கட்சியின் தலைவராக இருக்கும் ஆனந்தன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொற்கொடி அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி விடுவிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ஆனந்தன் அறிவித்துள்ளார். மேலும், "என் தலைமையில் தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்," என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதனால், கட்சிக்குள் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.