Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டு போடும் வீடியோவை ஷேர் பண்ணி தவெகவுக்கு பிரச்சாரம்... 3 மாதம் சிறை!. தேர்தல் ஆணையம் வார்னிங்!..

Advertiesment
vijay whistle
நடிகர் விஜய் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். அவரை ஒருமுறை அருகில் பார்க்க வேண்டும், அவரை ஒரு முறை தொட்டுப் பார்க்க வேண்டும், அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஏங்கும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இப்போது விஜய் அரசியல்வாதியாக மாறி தேர்தல் பிரச்சாரங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் செல்லும் போது சாலைகளில் அவரை பார்க்க பல ஆயிரம் பொதுமக்கள் கூடுகிறார்கள். அவர்களின் பிரச்சார வாகனத்தின் எல்லா பக்கங்களிலும் இருசக்கர வாகனங்களில் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் பின் தொடர்கிறார்கள். பலரும் அவரிடம் செல்பி எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்..

விஜய் ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதும் ‘நான் அரசியல்வாதியாக மாறி ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லவில்லை.. ஒவ்வொரு வீட்டுக்கும் சென்ற பிறகுதான் அரசியல்வாதியாக மாறியிருக்கிறேன்’ என்று பேசினார். தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் நடைபெறவிருக்கிறது. 30 வயதுப் உட்பட்ட இளைஞர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும் கூட விஜய்க்கு வாக்களிப்பதற்காக பலரும் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். எப்படிப்பட்டாலும் விஜய் 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்குவார் என தெரிகிறது..

இந்நிலையில்தான், விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை படம் பிடித்து விதிகளை மீறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து வாக்களிப்பதை படம் பிடித்து பதிவிட்டால் சம்பந்தப்பட்டவரின் சமூக வலைதள கணக்கு முடக்கப்படுவதோடு, மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்திருக்கிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5949 பதட்டமான வாக்குச்சாவடிகள்!.. பலத்த பாதுகாப்பு!.. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு..