Publish Date: Fri, 17 Jun 2022 (17:06 IST)
Updated Date: Fri, 17 Jun 2022 (17:08 IST)
முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
கடந்த சில நாட்களாக அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென நேற்று தனது சொந்த ஊரான சேலம் சென்றார். இந்த நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை ன்று
தெரிவித்தார்
மேலும் முதியோர் ஓய்வூதியத்தை தடையின்றி வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்காவிட்டால் முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை அதிமுக வழிநடத்தும் என்றும் கூறினார்
திருவண்ணாமலை கட்டாம்பட்டி பகுதியில் கட்சி கொடியேற்றி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது