Publish Date: Wed, 07 Oct 2020 (11:04 IST)
Updated Date: Wed, 07 Oct 2020 (11:06 IST)
தமிழகத்தில் முட்டை விலை கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக அதிகமாகி வருகிறது.
கொரோனா காரணமாக முதலில் பாதிக்கப்பட்டது முட்டை வியாபாரிகள்தான். அந்தளவுக்கு முட்டை விலைக் குறைந்து ஒரு ரூபாய்க்கும் கீழே சென்றது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. இந்நிலையில் சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத வகையில் முட்டை விலை 5.25 காசுக்கு விற்கப்பட்டது. இது இதுவரை இல்லாத விலை ஏற்றமாகும். இன்றும் முட்டையின் கொள்முதல் விலை 5.25 ரூபாயாகவே உள்ளது. கடைகளில் 5.50 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உள்ளது.