Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு சுசீந்தரன் படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா? மாஸ்டர் பிளான் போடும் சுசீந்தரன்!

சிம்பு சுசீந்தரன் படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா? மாஸ்டர் பிளான் போடும் சுசீந்தரன்!
, புதன், 7 அக்டோபர் 2020 (10:44 IST)
நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சுசீந்தரன் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். இந்நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம்.

மாநாடு படத்துக்குப் பிறகு சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில்தான் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போதே சிம்புவின் படத்தின் வேலைகளை சுசீந்தரன் மும்முரமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் மாநாடு படத்துக்கு முன்னதாகவே இந்த படத்தில் நடிக்க உள்ளாராம் சிம்பு. இந்நிலையில் சுசீந்தரன் குறைந்த பட்ஜெட்டில் 30 நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பட்ஜெட் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சிம்புவே தயாரிப்பதால் தன் சம்பளம் இல்லாமல் படத்தின் இதர செலவுகளுக்கு மொத்தமாக 10 கோடி ரூபாயை சுசீந்தரனிடம் கொடுத்து விடுவாராம். அந்த தொகையை வைத்துக்கொண்டு சுசீந்தரன் படத்தை எடுத்து சிம்பு கையில் கொடுத்து விட வேண்டும். அந்த படத்தை சிம்பு தன் மார்க்கெட்டுக்கு ஏற்ப விற்றுக்கொள்வாராம். இதனால் படப்பிடிப்பு செலவுகளை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறாரோ அவ்வளவு சுசீந்தரனுக்கு லாபமாக அமையும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா மற்றும் ஜோதிகா கோட்டைவிட்டதை பிடிப்பாரா நயன்தாரா? ரசிகர்கள் ஆவல்!