ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் ஏகாதசி விழா நடைபெற்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சோக சம்பவத்தில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 9 பக்தர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
ஏகாதசி சிறப்பு பூஜைகளுக்காக பெருமளவிலான பக்தர்கள் திரண்டதால், திடீரென நெரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த துயரச் சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி மற்றும் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், காயமடைந்தவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கவும், நிவாரண பணிகளை மேற்பார்வையிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.