Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ், டிடிவிவை சந்தித்தன் விளைவு.. அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்.. ஈபிஎஸ் அதிரடி..!

Advertiesment
அதிமுக

Siva

, வெள்ளி, 31 அக்டோபர் 2025 (17:50 IST)
நேற்று நடைபெற்ற முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்ட நிலையில் இன்று செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
 
 
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.”  
 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்புக்கு அண்ணாமலை காரணமா? அவரே அளித்த விளக்கம்..!