அதிமுகவை டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் பாடாய்படுத்தினார்கள் என அதிமுக பொதுக்குழுவில் கூறில் புலம்பியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எடப்பாடி பழனிச்சாமி பின்வருமாறு பேசினார்...
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நம் சரிவைச் சந்தித்தோம். குறுகிய காலத்தில் கூட்டணி அமைந்ததாலும், பிரச்சாரத்தில் சரியாக ஈடுபட முடியாததாலும் தான் அந்த சரிவு ஏற்பட்டது.
டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுக கட்சியை எவ்வளவு தூரம் பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதிமுக அரசு யாருக்கும் அடிமை அரசு கிடையாது.
என்னுடைய தந்தை திமுகவில் இருந்தவர். 1974 ஆம் ஆண்டு முதன் முதலில் அதிமுக கொடிக் கம்பத்தை எனது கிராமத்தில் நான் நட்டேன். உடனடியாக அதை திமுகவினர் பிடுங்கி எரிந்தனர். அன்று முதல் இன்று வரை கொடிக் கம்ப பிரச்சனை தொடர்ந்து வருகிறது.
அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் இல்லாத ஸ்டாலின் அரசு ஊழியர்களை மறைமுகமாகத் தூண்டிவிடுகிறார். இப்போதெல்லாம் கட்சியே துவங்காமல் சிலர் அரசியல் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை என பேசியுள்ளார்.