Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டம்மி மம்மி சசிகலா? வெளிய வந்தாலும் ஒன்னும் தேராது போலயே...

டம்மி மம்மி சசிகலா? வெளிய வந்தாலும் ஒன்னும் தேராது போலயே...
, திங்கள், 25 நவம்பர் 2019 (12:30 IST)
அதிமுகவில் திடீரென சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது சசிகலாவை டம்மி ஆக்கும் விதமாக அமைந்துள்ளது. 
 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்.   
 
இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யும் என கூறப்பட்டது.   
 
ஆனால், தற்போது கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கூறினார்.  எனவே இன்னும் ஓன்று அல்லது ஒன்றைரை ஆண்டுகளில் சசிகலா வெளியே வருவார் என தெரிகிறது. 
webdunia
சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அதிமுகவில் இணைந்து செயல்படுவார் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்ட திருத்தம் சசிகலாவிற்கு அவரது தரப்பிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், சசிகலா குடும்பத்தினர் கட்சி அதிகாரத்திற்கு வந்து விடுவர் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் பின்வருமாறு... 
 
1. அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். 
2. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கும் ஐந்து ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர்கள் மட்டுமே வர முடியும் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஹாராஷ்டிரா விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 14 நாட்கள் அவகாசம்