Publish Date: Mon, 24 Aug 2020 (08:19 IST)
Updated Date: Mon, 24 Aug 2020 (08:22 IST)
மாநிலங்களுக்கு இடையே பயணிக்க எந்த தடையும் விதிக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இ-பாஸ் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை தொடரலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.