சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை இருட்டடிப்பு செய்கின்றனர் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் பேசுவது நேரலை செய்யப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும் விருத்தாச்சலம் சிறுமி பாலியல் தொல்லை விவகாரத்தில் காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர்களின் வலியுறுத்தலால் தான் திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் பாலியல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். பாலியல் புகார் தொடர்பாக பேரவையில் நான் பேசிய பேச்சை ஒளிபரப்பவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்