கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்காக தயாராகும் பணியில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிய நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்போது பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
189 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதும் நட்சத்திர வேட்பாளர்களாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எடியூரபபாவின் மகன், சிடி ரவி உள்ளிட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 189 பேரில் 8 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.