நானும் டெல்டாகாரன் தான் அதனால் டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க அனுமதி தர முடியாது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் பேசிய நிலையில் இதே டெல்டா காரர்தான் டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க அனுமதித்தார் என எதிர்க்கட்சி ட் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்த கவனம் இருக்கு தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நானும் டெல்டா காரன் தான் என்றும் டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்றும் இதை தொழில் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதே டெல்டா காரர்தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.