Publish Date: Tue, 22 Jun 2021 (08:04 IST)
Updated Date: Tue, 22 Jun 2021 (08:29 IST)
அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மட்டும் ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை என புகழேந்தி கூறியுள்ளார்.
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடி வந்த நிலையில் நேற்று காலை பெங்களூரில் கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சென்னைக்கு அழைத்து வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை அடையாறு அனைத்து மகளீர் காவல் துறையினர் விசாரணை செய்ததாக தெரிகிறது. பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து இன்னும் நீக்கவில்லை. இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரு நொடியில் அவரை தூக்கி இருப்பார். நடிகை சாந்தினியோடு மேலும் பல அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து விசாரிக்கத்தான் வேண்டும் எனக் கூறியுள்ளார்.
webdunia
Publish Date: Tue, 22 Jun 2021 (08:04 IST)
Updated Date: Tue, 22 Jun 2021 (08:29 IST)