Publish Date: Thu, 23 Jul 2020 (11:55 IST)
Updated Date: Thu, 23 Jul 2020 (11:56 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,000 கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டம் சென்னைதான். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 89,561 பேரில் தற்போது 13,941 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 73,681 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும், 1,939 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குப் பிறகு 14,000 க்கும் கீழ் குறைந்துள்ளது.
சில வாரங்களாக சென்னையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால் சில நாட்களாக சிகிச்சையில் குணமாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என சொல்லப்படுகிறது.