பாஜக மூத்த தலைவர் அமித் ஷா வழங்கும் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துக்கொள்ள உள்ளனர்.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததும் தேசிய ஊடங்கள் தேர்தல் கணிப்புகளை வெளியிட்டன. அதில் பாஜக மீண்டும் ஆட்சி பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அமித் ஷா இன்று டெல்லியில் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்திற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி அதிமுகவும் பாஜக கூட்டணி கட்சி என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் டெல்லி சென்றுள்ளனர். இவர்களை தவிர்த்து பாமக மற்றும் தேமுதிகவை சேர்ந்த முக்கிய தலைவர்களும் டெல்லி பயணிக்கின்றனர்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் என எக்சிட்போல் தெரிவித்ததால் இந்த விருந்து என கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் திமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெறும் என எக்சிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.