Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எக்ஸிட் போல் ரிப்போர்ட் – ஸ்டாலினை நாடும் அமித் ஷா !

எக்ஸிட் போல் ரிப்போர்ட் – ஸ்டாலினை நாடும் அமித் ஷா !
, செவ்வாய், 21 மே 2019 (09:21 IST)
எக்ஸிட் போல் ரிப்போர்ட்கள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருந்தாலும் அதன் தலைமை மகிழ்ச்சியாக இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடைசி கட்ட தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆனாலும் இது பாஜக தலைமைக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஏனென்றால் உளவுத்துறையின் மூலம் அவர்கள் பெற்ற ரிப்போர்ட் வேறு விதமாக வந்துள்ளது. அதன்படி பாஜகவுக்கு தனிப்பெரும்பாண்மைக் கிடைக்காது, தொங்கு பாராளுமன்றமே அமைக்க முடியும் என அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் வரும் முன்பே கூட்டணிக் கட்சிகளைத் திரட்டும் முடிவில் இருக்கிறார் அமித்ஷா.

இதையடுத்து எப்படியும் தமிழகத்தில் அதிக இடங்களில் திமுக வெற்றி உறுதி என்பதை உறுதிசெய்துகொண்ட அமித்ஷா ஸ்டாலினிடம் தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஒருவேளை பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பாண்மைக் கிடைக்காவிட்டால் தங்களுக்கு வெளியில் இருந்தாவது ஆதரவுக் கொடுக்க வேண்டும் என ஸ்டாலினிடம் கேட்டுள்ளதாகவும் அதற்கு ஸ்டாலின் நேர்மறையான பதில் எதுவும் இதுவரை சொல்லவில்லை எனவும் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்குமா திமுக?