Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊர்ந்து போக பல்லியா பாம்பா? நடந்து போய்தான் முதல்வர் ஆனேன் ! எடப்பாடி பழனிச்சமி பதில்!

Advertiesment
எடப்பாடி பழனிச்சாமி
, வெள்ளி, 19 மார்ச் 2021 (15:26 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு இப்போது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் முதல்வரானது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் ஊர்ந்து சென்று முதல்வரானவர் என்று விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுக வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்து பிரச்சாரம் ‘ஒரு முதல்வரை எப்படி பேசவேண்டும் என்பதே ஸ்டாலினுக்கு தெரியவில்லை. ஏன் எனக்குக் கால் இல்லையா? ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க நான் என்ன பாம்பா? பல்லியா?. நடந்து சென்றுதான் முதல்வரானேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களின் பைனான்சியர் இவர்தானா??? கமலுக்கு அல்போன்ஸ் கேள்வி