Publish Date: Thu, 18 Mar 2021 (15:11 IST)
Updated Date: Thu, 18 Mar 2021 (15:27 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சீர்காழியில் நேற்று பேசிய அவர் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கும் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், தினகரன் மற்றும் சீமான் ஆகிய அனைவரையும் ஒரே மேடைக்கு அழைத்து 20 நிமிடம் பேச சொல்லுங்கள். யார் சரியாக பேசுகிறார்களோ அவர்களுக்கு மக்கள் ஓட்டு போடட்டும் எனக் கூறியுள்ளார்.