Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருமான வரித்துறை சோதனை - உறவினர்களை எச்சரித்த எடப்பாடி?

வருமான வரித்துறை சோதனை - உறவினர்களை எச்சரித்த எடப்பாடி?
, வெள்ளி, 20 ஜூலை 2018 (08:06 IST)
நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களை வருமான வரித்துறையினர் குறி வைத்திருப்பதால், அந்த தொழிலை செய்து கொண்டிருக்கும் பெரும்பாலான தனது உறவினர்களை முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
நெடுஞ்சாலை துறை தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் முதல்நிலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 
 
மேலும், செய்யாதுரையின்  எஸ்.பி.கே. நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 4வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வரி ஏய்ப்பு செய்தால் சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். என் உறவினர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்பது தவறான செய்தி. தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் என் உறவினர்கள் இருக்கிறார்கள் என முதல்வர் பழனிச்சாமி பூசி மழுப்பி பேட்டி கொடுத்தாலும் அதில் உண்மை இல்லை எனக் கூறப்படுகிறது.
 
முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த போது, பெரும்பாலான அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் அவரின் உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கே ஒதுக்கப்பட்டதாம். செய்யாதுரை அதில் முக்கியமானவர்.
 
தற்போது தன்னை குறிவைத்தே மத்திய அரசு வருமான வரித்துறையினரை முடுக்கிவிட்டிருப்பதால் முதல்வர் கல்லத்தில் இருக்கிறாராம். இதனால், தங்கள் உறவினர்களை எச்சரிக்க நினைத்த அவர் மேட்டூர் அணையை திறக்கப்போகிறேன் எனக்கூறிவிட்டு நேற்று சேலம் சென்றார். ஒரு எம்.எல்.ஏ.வே அதை செய்யலாம் என்கிற நிலையில், முதல்வராகிய பழனிச்சாமி சென்றது உறவினர்களுடன் ஆலோசனை நடத்தத்தான் எனக்கூறப்படுகிறது.
 
முதல்வர் அவரின் வீட்டின் செல்லும் முன்பே, அவரது சம்பந்தி உட்பட பல உறவினர்கள் சேலத்தில் உள்ள அவரின் வீட்டில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் பேசிய பழனிச்சாமி எச்சரிக்கையாக இருங்கள் எனக்கூறியதோடு பல அறிவுரைகளையும் வழங்கினாராம். அதன் பின்னர் உறவினர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்பி சென்றனர் என செய்திகள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிரூர் மடாதிபதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொல்லப்பட்டாரா?