Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செலவு செய்ய முடியாமல் தடுமாறும் துரை வைகோ.. திருச்சியில் தேறுவாரா?

Advertiesment
செலவு செய்ய முடியாமல் தடுமாறும் துரை வைகோ.. திருச்சியில் தேறுவாரா?

Mahendran

, வியாழன், 11 ஏப்ரல் 2024 (10:32 IST)
திருச்சி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடும் நிலையில் செலவு செய்ய முடியாமல் அவர் தடுமாறுவதாக கூறப்படுகிறது.
 
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக துரை வைகோ களம் இறங்கிய நிலையில் கூட்டணி கட்சிகள் ஆதரவு அவருக்கு இருந்தாலும் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

திருச்சியில் துரை வைகோவுக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் பாஜக  கூட்டணியின் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகிய இருவரும் பணத்தை தண்ணீராக செலவு செய்து கொண்டிருப்பதாகவும் ஆனால் துரை வைகோவிடம் இருந்து பணம் வரவில்லை என திமுக உள்பட கூட்டணி கட்சியினர் புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி உதயசூரியன் சின்னம் வாங்கி இருந்தாலும் எளிதில் மக்களிடம் சென்று வாக்கு கேட்கலாம் என்றும் துரை வைகோவின் தீப்பெட்டி சின்னத்தை   மக்களிடம் கொண்டு செல்ல சிரமமாக இருப்பதாகவும் கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எனவே திருச்சி தொகுதி கொஞ்சம் கொஞ்சமாக பாஜக கூட்டணி வேட்பாளர் பக்கம் சாய்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாப்பிட்டுவிட்டு 20 ரூபாய் கடன் சொன்ன விவசாயி.. அடித்துக் கொன்ற டிபன் கடைக்காரர்! – திருச்சியில் அதிர்ச்சி!