Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடியை அடுத்து தமிழகம் வருகிறார் அமித்ஷா.. மதுரையில் ரோடு ஷோ..!

Advertiesment
Amitshah

Mahendran

, புதன், 10 ஏப்ரல் 2024 (17:52 IST)
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்தார் என்பதும் நேற்று சென்னையில் ரோடு ஷோ நடைபெற்ற நிலையில் இன்று வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை அடுத்து உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வரும் 12ஆம் தேதி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 12ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்து சிவகங்கை சென்று பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்

அதன்பின் மாலை 6 மணிக்கு மதுரையில் ரோடு ஷோ நடத்த இருப்பதாக அங்கு அவர் ராம சீனிவாசனை ஆதரித்து வாக்கு சேகரிக்க இயற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அன்றைய இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அமித்ஷா அண்ட் இரவு மதுரையில் தங்கி விட்டு மறுநாள்  கன்னியாகுமரி சென்று பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
கன்னியாகுமரியில் ரோடு ஷோ நடைபெற இருப்பதாகவும் அதன் பின்னர் நாகப்பட்டினம் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 4, 5 தேதிகளில் அமித்ஷா தமிழகம் வருகை தர இருப்பதாக கூறப்பட்டு அதன் பின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்...'' - நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை