கச்சத்தீவை மீட்டால் மட்டுமே மீனவர் பிரச்சனைக்கு முடிவு காணப்படும் என்றும் ஆனால் கச்சத்தீவை இலங்கை அரசு திருப்பிக் கொடுக்க வாய்ப்பே இல்லை என்றும் மதிமுகவின் எம்பி துரை வைகோ கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதை ஆகியிருக்கும் நிலையில் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 6000 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது என்று துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
சமீபத்திய நாட்களில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளது என்றும் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 320 தமிழகம் மீனர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இந்த பிரச்சனைக்கு இறுதி முடிவுக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் மீனவர் பிரச்சினைக்கு அப்போதுதான் நிரந்தர முடிவு கிடைக்கும் என்றும், ஆனால் அதே நேரத்தில் இலங்கை அரசு கச்சத்தீவை திருப்பி தர ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.