பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே நாட்டிற்கு சென்ற நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடான புருனே நாட்டுக்கு பிரதமர் மோடி சென்ற நிலையில் அங்கு அந்நாட்டு மன்னரை சந்தித்து முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இரு தலைவர்களும் பாதுகாப்பு, விண்வெளி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டு இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதன் பின் சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி ,சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் அவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். திருவள்ளுவர் பெயரில் முதல் சர்வதேச கலாச்சார மையம் தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் இரண்டு நாடுகளிலும் வெற்றிகரமாக பயணத்தை முடித்த பிரதமர் மோடி சற்று முன் டெல்லி திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளன.