ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

Arun Prasath

வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:34 IST)
ரஜினிகாந்த் தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என் கூறிய நிலையில் திமுக பொருளாளர் துரை முருகன் பதிலடி தந்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில், இயக்குனர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல், எனக்கும் காவி சாயம் பூசி வருகின்றனர், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை என கூறினார்.

மேலும் இதை தொடர்ந்து, தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் நிலவுகிறது எனவும் கூறினார். இந்நிலையில் இதற்கு பதிலடி தருவது போல் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழகத்தில் இருக்கு வெற்றிடத்தை முக ஸ்டாலின் நிரப்பியுள்ளார் என கூறியுள்ளார்.

கட்சி தொடங்குவதாக அறிவித்த நாளிலிருந்து கொள்கைகள் குறித்து எதுவும் பேசாமல் இருந்த ரஜினி, தற்போது பாஜகவிற்கு எனக்கும் தொடர்பு இல்லை என்பது போல் கூறியதை எதிர்கட்சியினர் பாராட்டி வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என வழக்கம் போல் ரஜினி கூறியுள்ளது தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவினர் மற்றும் திமுகவினரிடையே சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மாரடைப்பு: ஆண்களைவிட பெண்கள் அதிகம் உயிரிழக்க காரணம் என்ன?