Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்துணவு முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு பார்ட்டி..! மது பிரியர்கள் செய்த தரமான சம்பவம்..!

Advertiesment
egg

Senthil Velan

, செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:00 IST)
நிலக்கோட்டை அருகே  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சத்துணவு கூடத்திற்குள் மது பிரியர்கள்  புகுந்து முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டுத் தின்று பார்ட்டி கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சுட்டிகாலாடிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
 
சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பள்ளியின் காம்பௌண்ட் சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்றனர். இதன் பின்னர் சத்துணவு கூட சமையலறையின் பூட்டை உடைத்து  குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட சத்துணவு முட்டைகளையும் எண்ணெய், மசாலா பொடிகளை பயன்படுத்தி அங்கேயே ஆம்லெட் போட்டு மது அருந்தி பார்ட்டி கொண்டாடியுள்ளனர்..
 
webdunia
சமயலறையைத் திறந்த பார்த்த பணியாளர்கள் சத்துணவு முட்டைகள் திருடப்பட்டு ஆம்லெட் போட்டு தின்று பார்ட்டி கொண்டாடி அலங்கோலமாக காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

 
கேஸ் சிலிண்டர், மீதம் இருந்த முட்டைகள்,  அரிசி, பருப்பு , சமையல் எண்ணெய் ஆகியவற்றை போதை இளைஞர்கள் அப்படியே விட்டுச் சென்றதால் சத்துணவு  பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்தில் சிக்கிய மியான்மர் ராணுவ விமானம்..! 6 பேர் படுகாயம்..!