தமிழக மீனவர்களை சிங்களப்படை கைது செய்வது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் துக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை மீண்டும் சிங்களப்படையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் நேற்று மூன்று படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென சுற்றி வளைத்த சிங்கள படையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் விசாரணைக்காக இலங்கை அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை செய்த பின்னர் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடனர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.