வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக உருவாகி, அதன் பின் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கிலோமீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 430 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோலாப்பூரிலிருந்து 610 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆந்திரா-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று லேசான மழையுடன் பணிமூட்டம் காணப்படும் என்றும், இன்று முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், காலை வேளையில் சில பகுதிகளில் பணிமோட்டம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.