Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கணவன் – பின்னணியில் கள்ளக்காதலியா ?

Advertiesment
மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கணவன் – பின்னணியில் கள்ளக்காதலியா ?
, திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (10:19 IST)
கேரளாவில் 7 மாத கர்ப்பிணியாக பெண்ணான ஐஸ்வர்யா என்பவர் தற்கொலை சம்மந்தமாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பிஜு என்ற கூலித்தொழிலாளி. இவர் தமிழகத்திலும் கேரளாவிலும் கூலி வேலை செய்து வந்துள்ளார். சமீபகாலமாக திருப்பூரில் கூலி வேலை செய்துவந்துள்ளார். தற்போது அவரது மனைவி 7 மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரது கணவர் பிஜு வரதட்சனைக் கேட்டு கொடுமைப் படுத்தியதுதான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிஜு தலைமறைவாகினார்.

இந்நிலையில் பிஜூவை போலிஸார் தேடித் திருப்பூரில் கண்டு பிடித்துள்ளனர். அப்போதுதான் ஐஸ்வர்யாவின் மரணத்துக்கு பிஜு மட்டும் காரணமில்லை எனவும் அவரது கள்ளக்காதலியான மனோசாந்தி என்பவரும் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மனோசாந்தியின் தூண்டுதலின் பெயராலேயே பிஜு ஐஸ்வர்யாவை வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஐஸ்வர்யாவிடம் வரதட்சணைக் கேட்டு இவரும் மிரட்டியுள்ளதாகவும் அதனால்தான் மனமுடைந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சக நோயாளிகளை அடித்தே கொன்ற நபர்: மருத்துவமனையில் பயங்கரம்