உத்தரபிரதேச மாநிலம் எட்டவா மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு கர்ப்பிணிப்ப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை 3 தலைகளுடன் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த தகவல் பரவலாகிவருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் எட்டவா மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் ஒரு கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்து.
அக்குழந்தை 3 தலைகளுடன் பிறந்தது. இதைக் கண்ட மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இரட்டைத் தலையுடன் குழந்தைகள் பிறப்பு என்பது எல்லோரும் அறிந்ததுதான். மூன்று தலைகளூடன் இந்த குழந்தை பிறந்தது மருத்துவrகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று தலையில் ஒரு தலை பிரதான தலையாகவும்,மற்ற இரண்டு தலைகளூம் ஒட்டி இருக்கின்றன. ஆனால் மற்ற இரண்டு தலைகளுக்கு கண் , மூக்கு போன்ற உறுப்புகள் இல்லை. மேலும் இக்குழந்தை உயிர்பிழைக்க 55 % அளவே வாய்ப்பு இருப்பதாகவும், ஒருவேளை குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்தாலும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்குமா என்பது சந்தேகம்தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.