Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கீழடி ஆராய்ச்சியில் அரசியல் செய்யாதீர்கள் - வைரமுத்து

கீழடி ஆராய்ச்சியில் அரசியல் செய்யாதீர்கள் - வைரமுத்து
, புதன், 25 செப்டம்பர் 2019 (15:09 IST)
தமிழர்கள் தொன்மையான நாகரிக அடையாளம் உள்ளவர்கள் என்பதற்கான சான்று கீழடியில் கிடைத்த தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் தற்போது அரசால் வெளியிடப்பட்டுள்ளது. 
இதற்கு, தமிழறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள் கவிஞர்கள் மற்றும் உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த கீழடியில் கிடைந்த தமிழினத்தின்  சான்றுகளைக் குறித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
 
கீழயிடில் கிடைத்த படிமங்கள், தாழிகள், மண்பானைகள் எல்லாம் கிமு. 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழர்கள் எழுத்தறிவு, பெற்று உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக பலரும் கொண்டாடி பெருமிதம் கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து கீழடி பற்றி கூறியுள்ளதாவது :
 
'உலகத்தை வெல்ல தாய்மொழி ஆங்கிலம், கணிப்பொறி அறிவு போதும்; தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதை கடைசித் தமிழன் இருக்கும்வரை ஏற்க மாட்டான்.
webdunia
3500 ஆண்டுகள்  முன் எழுத்தறிவு பெற்றவன் தமிழன். கீழடி ஆராய்ச்சியில்  அரசியல் செய்யாதீர்கள். சிந்து சமவெளிக்கு முந்தைய சமவெளி கீழடி 'எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிமுகமாகிறது முதல் ஆண்ட்ராய்டு 10 ஸ்மார்ட்ஃபோன்..