Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்களை கண்டால் பிடிக்காது: இரு மாணவிகள் தற்கொலை முயற்சி

Advertiesment
ஆண்களை கண்டால் பிடிக்காது: இரு மாணவிகள் தற்கொலை முயற்சி
, சனி, 2 ஜூலை 2022 (23:11 IST)
மதுரை மாவட்டத்தில் இரு  சட்டக்கல்லூரி மாணவிகள் ஹோட்டல் அறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் சிறு வயது முதல் தோழிகளாக இருந்துள்ளனர். இருவரும் பிளஸ் 2 முடித்த பின், சட்டக்கல்வி படிக்க முடிவு செய்த நிலையில் அவர்கள் இருவரிஉக்கும் திருச்சி மற்றும் திருநெல்வியில் இடம்  கிடைத்துள்ளது.

இந்த நிலையில்,  அவர்கள் இருவருக்கும் 22 வயதான நிலையில் வீட்டில் வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது,இவர்கள் மதுரையில் நீதிமன்றம் எதிரே உள்ள ஹோட்டலுக்கு வந்து ஒரு அறையில் 4 நாட்கள் தங்கியுள்ளனர். பின்னர்,  நேற்று காலை ஊழியர்கள் கதவைத் தட்டியும் திறக்காததால், போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் விஸம் குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்துள்ளனர். இருவரையிம் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, இரு மாணவிகளுக்கும் ஆண்களைக் கண்டால் பிடிக்காது என்பதால், வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து வந்த நிலையில், இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரள மாநிலத்தில் பரவும் ஆந்தராக்ஸ் ! சுகாதாரத்துறை எச்சரிக்கை