Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லை விபரீதம்: மதுரையில் 200 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு!

Advertiesment
நெல்லை விபரீதம்: மதுரையில் 200 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு!
, சனி, 18 டிசம்பர் 2021 (11:17 IST)
மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 200 பள்ளி கட்டடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

 
நெல்லையில் உள்ள சாஃப்டர் என்ற பள்ளியில் கழிப்பறை சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததை அடுத்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் சுற்றுச் சுவர் இடிந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெல்லை பள்ளி விபத்து தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோருக்கு வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 200 பள்ளி கட்டடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 120 வகுப்பறை கட்டடங்கள், 80 கழிவறை கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதால் முழு கண்காணிப்பில் உள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் சதமடித்த ஒமிக்ரான்: பீதியில் மக்கள்!