எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தரக்கூடாது என செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேவர் ஜெயந்தி அன்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் செங்கோட்டையனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் வேதனையடைந்தாலும் தான் அதிமுகவை ஒன்றிணைப்பதை லட்சியமாக கொண்டு செயல்படுவதாக கூறிய செங்கோட்டையன் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் பிரிவு உண்மையான அதிமுக கட்சி அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் இதை நிரூபணம் செய்ய தனக்கு கால அவகாசம் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். செங்கோட்டையனின் இந்த ட்விஸ்ட் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K