Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரம் ஏற வேண்டாம், என்னை பின் தொடர வேண்டாம்.. தவெக தொண்டர்களுக்கு அறிவுரைகள் கூறிய விஜய்..

Advertiesment
TVK Vijay

Mahendran

, வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (16:35 IST)
விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் இரண்டாவது சனிக்கிழமை நாளை நடைபெறவுள்ள நிலையில், தவெக தொண்டர்கள் என்னை பின் தொடர வேண்டாம், மரம் ஏற வேண்டாம் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும்  தவெக தொண்டர்கள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய 12 வழிகாட்டு நெறிமுறைகளை அவர் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:
 
1. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், அதை முடித்து விட்டுச் செல்லும் போதும் வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம்.
 
2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள். சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது.
 
3.கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள். முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்து கொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழ வேண்டும்.
 
4.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.
 
5.காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கட்சியினர் தவிர்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்: காங்கிரஸ் பிரபலம்..!